பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம்

31 ஆவணி 2025 ஞாயிறு 19:27 | பார்வைகள் : 204
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் தற்போது அதன் வரலாற்றிலேயே மிகப்பாரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
சட்லெஜ், செனாப் மற்றும் ராவி நதிகளில் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்ததால் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாகாண அமைச்சர் மரியம் அவுரங்கசீப் இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ளம் பஞ்சாப் மாகாணம் இதுவரை கண்டிராத அளவிற்கு பாரியதாகும். மூன்று நதிகளும் ஒரே நேரத்தில் அதிக நீருடன் பெருக்கெடுத்து ஓடுவது இதுவே முதல்முறை.
மக்கள் பாதுகாப்பிற்காக பள்ளிகள், காவல் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு மையங்களில் மீப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பாக வெளியற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த வெள்ளம் காலநிலை மாற்றத்தின் தாக்கமாக கருதப்படுகிறது.
பஞ்சாப் மாகாணம் பாகிஸ்தானின் breadbasket என அழிக்கப்படும் முக்கிய விவசாய மாகாணமாக இருப்பதால், இந்த வெள்ளம் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமையை பெரிதும் பாதிக்கக்கூடும்.
இது பாகிஸ்தானின் சுற்றுசூழல் மற்றும் சமூக நலனுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025