Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு!!

ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு!!

31 ஆவணி 2025 ஞாயிறு 19:20 | பார்வைகள் : 556


 

பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் கவிழ்க்கப்படும் நிலையில் உள்ள நிலையில், அவரது பிரபலத்தன்மை அதிகரித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருடன், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பிரபலத்தன்மையும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதியின் பிரபலத்தன்மை +5 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. பிரதமரின் பிரபலத்தன்மை +2 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

சென்ற ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில், ஓகஸ்ட் மாதத்தில் அவர்களது பிரபலத்தன்மை அதிகரித்துள்ளது.

பிரான்சுவா பெய்ரூ மீது நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற உள்ளது. பிரதமர் கட்டாய பதவி விலகலுக்கு உள்ளாகுவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்