‘பூமர்’ என விளிக்கப்பட்ட பிரதமர்.. - பதிலளித்தார்!!

31 ஆவணி 2025 ஞாயிறு 20:20 | பார்வைகள் : 1778
பிரதமர் பிரான்சுவா பெய்ரூவை ‘பூமர்’ என அழைக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இன்று தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் அதற்கு பதிலளித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டில் பிறந்தவர்களை ‘ஜென் ஸி’ என சொல்வது போல் 1965 அம் ஆண்டுகளில் பிறந்தவர்களை பூமர் என சொல்வதுண்டு. சில நேரங்களில் அதனை கேலி செய்யவும் பயன்படுத்துவதுண்டு. அதேபோன்ற கிண்டல் தொனியில் பிரதமரை பூமர் என அழைக்கப்பட்டதை அடுத்து, இன்று அதற்கு காரசாரமான பதில் ஒன்றை வழங்கினார். ”இன்று புதிய தலைமுறை கடலில் உள்ளது. வேலை தேடி எடுப்பதில் சிக்கல் உள்ளது. எங்களுடைய தலைமுறையில் நாட்டுக்கு கடன் இல்லை. இன்று பில்லியன்களில் நாட்டுக்கு கடன் உள்ளது. புதிய தலைமுறைகள் இந்த கடனில் வந்து இணைந்து நாட்டை மீட்கவேண்டும்!” என பெய்ரூ தெரிவித்தார்.
“நாட்டுக்கு கடன் இல்லை என்றால் புதிய கொள்கைகளை தொடங்கலாம். இந்த பூமருடன் வந்து இணைந்துகொள்ளுங்கள்!” என விளாசித் தள்ளினார்.