Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய அதிபர் புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி; பிரதமர் மோடி

ரஷ்ய அதிபர் புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி; பிரதமர் மோடி

1 புரட்டாசி 2025 திங்கள் 06:12 | பார்வைகள் : 174


ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும் வகையில், சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் சந்தித்து பேசினர்.

வரவேற்பு சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று துவங்கியது. இது இன்று நிறைவு பெறுகிறது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இன்று (செப் 01) ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு, இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீதம் அபராத வரி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர்.

புடினை சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ''ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது'' என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்