இந்தியாவுக்கு எதிராக வரி: ஐரோப்பிய நாடுகளை துாண்டுகிறது அமெரிக்கா

1 புரட்டாசி 2025 திங்கள் 12:12 | பார்வைகள் : 159
இந்தியா மீது ஐரோப்பாவும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும், அவர்களிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை இறக்குமதி செய்யக்கூடாது என, அமெரிக்கா துாண்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்காக ரஷ்யாவிடம் இருந்து, 2022 முதல் தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
இதனால் ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதாகவும், அதை வைத்து அவர்கள் உக்ரைனுடனான போரில் முன்னேறி வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்திய இறக்குமதிகளுக்கு 50 சதவீத வரி விதித்தார்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், 'ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியா கிடையாது; சீனா. அதே போல் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு இயற்கை எரிவாயு வாங்குவது இந்தியா இல்லை; ஐரோப்பிய நாடுகள். ஆனால் இந்தியா மீது மட்டும் வரி விதித்து அமெரிக்கா வேஷம் போடுகிறது' என பதிலடி தரப்பட்டது.
அமெரிக்காவின் வரி விதிப்பு இருந்தாலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்கவில்லை.
எனவே, இந்தியா மீது ஐரோப்பாவும் அதிக வரிகளை விதிக்க வேண்டும் என, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் அந்நாடுகளுக்கு அழுத்தம் தருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி விதிப்பை ஐரோப்பிய நாடுகள் எதுவும், இதுவரை வெளிப்படையாக ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025