Paristamil Navigation Paristamil advert login

இரு விடுமுறைகளை நீக்குவதற்கு பதிலாக - வாரத்துக்கு 36 மணிநேர வேலை!!

இரு விடுமுறைகளை நீக்குவதற்கு பதிலாக - வாரத்துக்கு 36 மணிநேர வேலை!!

1 புரட்டாசி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 1034


பிரெஞ்சு மக்கள் ஊதியமின்றி மேலதிகமாக உழைப்பதன் மூலம் பல பில்லியன் யூரோக்கள் சேமிக்க முடியும் என அரசு நம்புகிறது. இதற்காக இரண்டு பொது விடுமுறைகளை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு உடனடியாகவே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, புதிய மாற்றுவழி ஒன்றை தெரிவித்தார்.  இரண்டு பொது விடுமுறையை நீக்குவதற்கு பதிலாக, வாரத்துக்கு 36 மணிநேரங்கள் உழைக்க வேண்டும் என அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.

வாரத்துக்கு 1 மணிநேரம் மேலதிகமாக பணிபுரிய வேண்டும் எனும் ஆலோசனை இடம்பெற்று வருகிறது. ஆனால் அதனை நான் உடனடியாக செயற்படுத்தப்போவதில்லை. மக்களின் எதிர்வினைகள் என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது. மேலதிக வேலை நேரம் ( heures supplémentaires)  பாதிக்கப்படும். அதில் இருந்து கிடைக்கும் பணம் பாதிக்கப்படும் எனும் கருதுகோள்கள் உள்ளன என பிரதமர் பெய்ரூ தெரிவித்தார்

வர்த்தக‌ விளம்பரங்கள்