இந்தோனேசியாவில் நேரடி ஒளிபரப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய டிக்டாக்!

1 புரட்டாசி 2025 திங்கள் 07:53 | பார்வைகள் : 245
இந்தோனேசியாவில் டிக்டொக் செயலி அதன் நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் இடம்பெற்று வரும் போராட்டங்களின் போது வன்முறை அதிகரித்து வருவதால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் பொலிஸாரின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து போராட்டங்கள் தொடங்கின.
இந்த போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வன்முறைச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025