வடக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படும் – ஜனாதிபதி உறுதி

1 புரட்டாசி 2025 திங்கள் 15:25 | பார்வைகள் : 175
போரின்போது இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட, வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு.
வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025