Paristamil Navigation Paristamil advert login

Bruxellesஇன் பார்வையில் பிரான்ஸின் அரசியல் குழப்பத்தால் ஐரோப்பா பதற்றத்தில்!!

Bruxellesஇன் பார்வையில் பிரான்ஸின் அரசியல் குழப்பத்தால் ஐரோப்பா பதற்றத்தில்!!

1 புரட்டாசி 2025 திங்கள் 15:29 | பார்வைகள் : 382


பிரான்ஸில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, அந்நாட்டின் அரசியல் நிலைமை ஸ்திரமற்றதாக மாறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. 

பிரான்ஸ், ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இருப்பதால், அதன் அரசியல் நிலைமை மற்ற உறுப்புநாடுகளின் நிலைப்பாட்டையும் பாதிக்கக்கூடியது என பிரசெல்லிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பாவிற்கு வலிமையான தலைமை தேவைப்படும் நேரத்தில், பிரான்ஸின் ஸ்திரமற்ற அரசியல், அதன் நம்பகத்தன்மையை குறைக்கும் அபாயத்தில் உள்ளது. பிரான்ஸ் ஜெர்மனியுடன் சமநிலை அமைத்துப் பணியாற்றும் முக்கிய உறுப்புநாடாக இருப்பதால், அதன் நிலைமை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் தாக்கம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

மேலும், மற்ற ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதையே ஒத்துக்கொள்கின்றனர். குறிப்பாக, புதிய தலைவராக பிரிட்ரிக் மெர்ஸ் தலைமையில் ஸ்திரமான பெரும்பான்மை அமைந்துள்ள ஜெர்மனியுடன் எதிர்கொள்ளும் நேரத்தில், பிரான்ஸ் பலவீனமாக இருப்பது வருத்தத்துக்குரியதாக இருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்