Paristamil Navigation Paristamil advert login

புதிய கான்செப்ட் ஸ்கூட்டரை வெளியிட்ட Ather

புதிய கான்செப்ட் ஸ்கூட்டரை வெளியிட்ட Ather

1 புரட்டாசி 2025 திங்கள் 18:35 | பார்வைகள் : 130


Ather நிறுவனம் புதிய கான்செப்ட் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Ather Energy, தனது மூன்றாவது Ather Community Day நிகழ்வில் புதிய EL01 என்ற கான்செப்ட் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இந்த ஸ்கூட்டர், Ather உருவாக்கியுள்ள புதிய தலைமுறை EL Platform அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இது 450 Platform-க்கு பிறகு உருவாக்கப்பட்ட முதல் முழுமையான வாகன கட்டமைப்பாகும்.

 

EL Platform பலவகை மின்சார ஸ்கூட்டர்களை உருவாக்கும் வகையில், அதிக அளவில் உற்பத்தி செய்யும் திறன் மற்றும் பல்துறை பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த புதிய ஸ்கூட்டர்கள், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் அமைக்கப்பட்ட Ather நிறுவனத்தின் புதிய உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படவுள்ளன.

இந்த புதிய Platform, Ather நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்