உக்ரைனுடனான போர் நெருக்கடி - சீனா, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு புட்டின் பாராட்டு!

1 புரட்டாசி 2025 திங்கள் 19:35 | பார்வைகள் : 215
உக்ரைனுடனான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா மற்றும் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பாராட்டு தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) இரண்டு நாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உரையாற்றும் போதே, உக்ரைன் போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா மற்றும் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ஈரான் ஜனாதிபதி உட்பட 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தனது உரையில், உக்ரைனில் அமைதி ஏற்பட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடனான தனது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்தச் சந்திப்பின் விவரங்களை உலகத் தலைவர்களிடம் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் உக்ரைனில் அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1