முடி உதிர்வு பிரச்சனையை போக்கும் கொய்யா இலை ?
10 பங்குனி 2021 புதன் 05:31 | பார்வைகள் : 9074
கொய்யா இலைகளை சரியாக பயன்படுத்தினால் பிரச்சனைக்கான தீர்வு காண, நீரில் கலந்து கொதிக்கவைத்து கூந்தலில் தடவி பயன்படுத்தலாம், கொய்யா இலை எண்ணெய்யாக காய்ச்சியும் பயன்படுத்தலாம்.
கொய்யா இலையில் வைட்டமின் பி நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சியும் அடர்த்தியும் அதிகரிக்க உதவும். இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் தலைமுடி வேர்களை பலப்படுத்த உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நிறைந்திருப்பதால் இவை ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடி முடி சேதத்தை தடுக்கின்றன. இவை தலையின் ஸ்கால்ப் பகுதியில் கொலாஜன் சுரப்பை மேம்படுத்துவதால் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சி சாத்தியமாகிறது.
கொய்யா இலை சாறு அரிப்பு, பொடுகு, வறட்சி போன்றவற்றை போக்கும். இவை மூன்றுமே தலைமுடி உதிர்வுக்கு மிகப்பெரிய காரணம். இவை கூந்தலின் வளர்ச்சியையும் தடுத்து முடி உதிர்வையும் அதிகரிக்க செய்கிறது.
கொய்யா இலைகள் கூந்தலின் அளவுக்கேற்ப 15 அல்லது 20 இலைகள் எடுத்து சுத்தமாக கழுவி அவை மூழ்கும் அளவு நீர் விட்டு வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து அந்த இலைகளை அரைக்கவும். இலை ஊறவைத்த நீரையே பயன்படுத்தி கொள்ளலாம்.