திருமண முறிவு! - 10,000 யூரோக்கள் குற்றப்பணத்துடன் புதிய மாற்றம்!!

2 புரட்டாசி 2025 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 1152
திருமண முறிவு (divorce) பெறுவது தொடர்பில் இன்று செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் சில புதிய முறைகள் நடைமுறைக்கு வருகின்றன.
«Modes amiables de règlement des différends» எனும் புதிய விதிமுறை இன்று முதல் கட்டாயமாக கவனிக்கப்படும். விவாகரத்துக்காக வரும் தம்பதிகளில் இருவரையும் உளநல ஆலோசகரிடம் அல்லது மத்தியஸ்தகரிடம் அனுப்புவதை நீதிபதி முடிவு செய்ய முடியும். நீதிபதி அதற்காக அறிவுறுத்தலை வழங்கும் போது அதனை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இந்த விதி, விவாகரத்து வழக்குகளில் இணக்கமான தீர்வுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இணக்கசபை அல்லது மத்தியகஸ்தரின் அழைப்புக்கு செல்ல முடியவில்லை என்றால் விவாகரத்து பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனவும், அது 10,000 யூரோக்கள் வரை குற்றப்பணம் செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1