Paristamil Navigation Paristamil advert login

லியோன் நகரை அதிரவைத்த படுகொலை! - 13 வயதுச் சிறுவன் கைது!!

லியோன் நகரை அதிரவைத்த படுகொலை! - 13 வயதுச் சிறுவன் கைது!!

2 புரட்டாசி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 847


 

16 வயதுடைய சிறுவன் ஒருவர் கத்தியால் பல துண்டுகளாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தத்தை உறையவைக்கும் இச்சம்பவத்தை மேற்கொண்டது 13 வயதுடைய சிறுவன் ஒருவன் என தெரியவந்துள்ளது.

லியோன் நகரின் புறநகப்பகுதியில் இச்சம்பவம் இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு இடம்பெற்றதாகவும்,  இரு நண்பர்களுடன் Caluire-et-Cuire நகர்ப்பகுதியில் நின்றிருந்த போது அவர்களை நெருங்கிய குறித்த 13 வயதுச் சிறுவன், கத்தி ஒன்றினால் சரமாரியாக வெட்டியுள்ளான்.. பல இடங்களில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான சிறுவன், சம்பவ இடத்திலேயே பலியானார்.

தாக்குதலாளியின் நோக்கம் குறித்து அறிய முடியவில்லை. தப்பி ஓடி தலைமறைவான கொலையாளிச் சிறுவனை லியோன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியுள்ளது.  கொல்லப்பட்டவர் ஒரு உதைபந்தாட்ட வீரர் என தெரிவிக்கப்படுகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்