Paristamil Navigation Paristamil advert login

செரிமான பிரச்சனையை சீராக்கும் ஓமம்...!!

செரிமான பிரச்சனையை சீராக்கும் ஓமம்...!!

9 பங்குனி 2021 செவ்வாய் 10:51 | பார்வைகள் : 9116


 ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு ஆகியவை நீங்கும்.

 
அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
 
வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு  லேசாகி விடும்.
 
பல்வலி இருந்தால், இந்த எண்ணெய்யைப் பஞ்சில் தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும். வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
 
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க  விடவேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க  வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.
 
ஓமம், சீரகம் கலவை வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. "ஜெலூசில்" போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க்க விளைவுகளும் கிடையாது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்