Paristamil Navigation Paristamil advert login

ILT20 தொடருக்கு செல்லும் அஷ்வின் - CSKவில் அவர் இடத்தை நிரப்பும் தமிழக வீரர்?

ILT20 தொடருக்கு செல்லும் அஷ்வின் - CSKவில் அவர் இடத்தை நிரப்பும் தமிழக வீரர்?

2 புரட்டாசி 2025 செவ்வாய் 08:09 | பார்வைகள் : 114


அஷ்வினுக்கு பதிலாக தமிழக வீரரை அணிக்கு கொண்டு வர CSK ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், வேறு சர்வதேச கிரிக்கெட் லீக்களில் விளையாட உள்ளதாகவும் அஷ்வின் அறிவித்தார்.

எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் ILT20 கிரிக்கெட் லீக்கில் அஷ்வின் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஏலம் வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், இந்த ஏலத்தில் பங்கேற்க அஷ்வின் தனது பெயரை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.9.75 கோடிக்கு வாங்கப்பட்ட அஷ்வின், 2025 ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில், அஷ்வினுக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை கொண்டுவர CSK ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு புனே அணியில் விளையாடி வந்த அஷ்வினுக்கு மாற்று வீரராக அணியில் இணைந்து தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார் வாஷிங்டன் சுந்தர்.

இதில், மும்பைக்கு எதிரான போட்டியில், 16 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

அதைத்தொடர்ந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர், 2025 ஐபிஎல் தொடரில் ரூ.3.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை வாங்கியது.

2025 ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொடரில் மொத்தம் 11 ஓவர்கள் மட்டும் வீசினார்.

இதனால், GT அணி அவரை விட்டுத்தர வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்