Paristamil Navigation Paristamil advert login

சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் கச்சதீவு?

சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் கச்சதீவு?

2 புரட்டாசி 2025 செவ்வாய் 14:02 | பார்வைகள் : 232


நெடுந்தீவு மற்றும் கச்சதீவை இணைக்கும் முன்மொழியப்பட்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆய்வு நடந்து வருவதாக அமைச்சர்  சந்திரசேகர்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் நேற்று கச்சத்தீவுக்கு கண்காணிப்பு விஜயம் செய்தபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை கூறியுள்ளார்.

கச்சதீவு பகுதியில் செயல்படும் உள்ளூர் மீனவர்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு முயற்சிகள் குறித்து கடற்படையுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பார்வையாளர்களை ஈர்க்கும் நெடுந்தீவு முதல் கச்சதீவு வரை சுற்றுலா வளர்ச்சியை விரிவுபடுத்தும் திட்டங்கள் உட்பட, பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன எனறும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்