சொன்ன சொல்லை காப்பாற்றியுள்ளோம்; முதல்வர் ஸ்டாலின்

3 புரட்டாசி 2025 புதன் 09:46 | பார்வைகள் : 105
பல தடைகளை கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி உள்ளோம், '' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் ஆகியோர் திமுக அளித்த வாக்குறுதிகள், நிறைவேற்றம், தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து பேட்டி கொடுத்தனர். அப்போது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம்!திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க ஆதாரங்களோடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் ஆகியோர் விளக்கியுள்ளனர்.
இன்னும் ஒருபடி மேலே சொன்னால், காலை உணவுத்திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாதவை!
முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழகத்தை வெல்ல முடியாத பாஜ அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1