விரைவில் நல்ல அறிவிப்பு வரும்; அமெரிக்க வரி விதிப்பு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

3 புரட்டாசி 2025 புதன் 11:46 | பார்வைகள் : 170
டிரம்ப் விதித்துள்ள 50% வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். விரைவில் நல்ல செய்தி வரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அமெரிக்கா 50% வரி விதித்துள்ளதால், பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று சென்னையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் பின்வருமாறு:
மத்திய அரசு சார்பாக ஏற்றுமதி செய்யும் அனைத்து துறையினர் உடனும் பேச்சுவார்த்தை நடத்தினேன். டில்லியிலும் என்னை சந்தித்தார்கள். நான் மத்திய அரசு சார்பில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு சொல்ல விரும்புவது, மத்திய அரசு சார்பில் கோவிட் போன்ற அந்த சந்தர்ப்பத்திலும் கூட தொழிலில் இருப்பவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, ஒரு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தோம்.
எந்த தொழிலும் மூடப்படாத வகையில் திட்டத்தை கொண்டு வந்து மத்திய அரசு உதவியாக இருந்தது. அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் கஷ்டப்படும் எல்லாருக்கும் நான் சொல்வது, நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். சீக்கிரமாக ஏற்றுமதி செய்யும் அனைவருக்கும் நல்ல அறிவிப்பு வரும். அமெரிக்கா விதித்த வரியால் நஷ்டமடைபவர்களுக்கு உதவியாக நாங்கள் இருப்போம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1