Paristamil Navigation Paristamil advert login

அரசாங்கத்தை கலைப்பதை தவிர வேறு தீர்வு இருக்க முடியாது! - நிக்கோலா சர்கோஷி ஆவேசம்!!

அரசாங்கத்தை கலைப்பதை தவிர வேறு தீர்வு இருக்க முடியாது! - நிக்கோலா சர்கோஷி ஆவேசம்!!

2 புரட்டாசி 2025 செவ்வாய் 18:33 | பார்வைகள் : 951


பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கத்தை கலைப்பதை தவிர வேறு தீர்வு இருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி  நிக்கோலா சர்கோஷி அறிவித்துள்ளார்.

வரும் திங்கட்கிழமை 8 ஆம் திகதி பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெற உள்ளமை அறிந்தே. புதிய பிரதமரின் பெயர்களை இப்போதே ஜனாதிபதி மக்ரோன் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், நிக்கோலா சர்கோஷி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ”இதனை சொல்வதற்குரிய சந்தர்ப்பம் இந்த கோடை காலத்தில் எனக்கு ஏற்பட்டுள்ளது. அரசை கலைப்பதை தவிர வேறு தீர்வுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!” என அவர்  தெரிவித்தார்.

மக்ரோன் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் நான்காவது பிரதமர் மாற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்