3.6 மில்லியன் யூரோக்களுக்கு வீட்டை விற்ற முதல்பெண்மணி!!

2 புரட்டாசி 2025 செவ்வாய் 19:36 | பார்வைகள் : 1130
முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் அவரது வீட்டினை 3.6 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனை செய்துள்ளார். அடுத்த பத்து ஆண்டுகளில் வீட்டின் பெறுமதி கற்பனை செய்ய முடியாத அளவு அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மக்ரோன் தம்பதிகளின் Villa Monéjan என பெயரிடப்பட்ட பங்களா அவரது பிறப்பிடமான Le Touquet நகரில் அமைந்துள்ளது. குறித்த வீட்டினையே அவர்கள் விற்பனை செய்துள்ளனர் எனவும், அடுத்த பத்து ஆண்டுகளின் அதன் பெறுமதி 200% சதவீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியினை Le Canard Enchaîné ஊடகம் வெளியிட்டுள்ளது.
660 சதுர மீற்றர் காணியில், 250 சதுர மீற்றர் அளவுடைய வீடு அமைக்கப்பட்டுள்ளது எனவும், 2.7 மில்லியன் தொடக்கம் 2.8 மில்லியன் யூரோக்கள் வரை விற்பனை விலை எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில்ம், 3.6 மில்லியன்களுக்கு விற்பனையாகியுள்ளது.
அதேவேளை, 10 ஆண்டுகளுக்கு முன்னர், 2014 ஆம் ஆண்டின் குறித்த பங்களாவின் பெறுமதி 1.2 மில்லியன் யூரோக்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1