Paristamil Navigation Paristamil advert login

பாடசாலையின் முதல் நாள் - அதிபர் தற்கொலை!!

பாடசாலையின் முதல் நாள் - அதிபர் தற்கொலை!!

3 புரட்டாசி 2025 புதன் 07:46 | பார்வைகள் : 1258


புதிய கல்வி ஆண்டு ஆரம்பமான முதல் நாள், பாடசாலை அதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Cantal நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிபுரியும் Caroline Grandjean எனும் அதிபரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கடந்த பலமாதங்களாக அவரது பாலினம் தொடர்பான கேலிகிண்டலுக்கு உள்ளானதாகவும், அதை அடுத்தே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் Élisabeth Borne நேற்று செப்டம்பர் 2 ஆம் திகதி அறிவித்தார்.

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் சீண்டல்கள், பாலினம் தொடர்பான சீண்டல்கள், அடக்குமுறைகள், இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவரும் நிலையில், இச்சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்