Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் பீஜிங் நகரில் பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு

சீனாவில் பீஜிங் நகரில் பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு

3 புரட்டாசி 2025 புதன் 09:45 | பார்வைகள் : 238


சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

பீஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்றது.

இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உட்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர்.

இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உட்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன.

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்