Paristamil Navigation Paristamil advert login

வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 11 பேர் பலி

வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 11 பேர் பலி

3 புரட்டாசி 2025 புதன் 10:45 | பார்வைகள் : 283


வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்க இராணுவ தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா நாட்டில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ (Nicolás Maduro) ஜனாதிபதியாக உள்ளார்.

இவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை விநியோகம் செய்வதாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் இராணுவத் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் கொல்லப்பட்டனர்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள், சர்வதேச கடல் வழியாக அமெரிக்காவை நோக்கிப் போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது அவர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்