கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு

3 புரட்டாசி 2025 புதன் 10:45 | பார்வைகள் : 237
மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் புதன்கிழமை (03) காலை இடம்பெற்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 தாக்குதல் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1