இனி ஹெல்மெட் தேவையில்லை..! பாதுகாப்பு கூண்டுடன் வரும் BMW Vision CE ஸ்கூட்டர்

3 புரட்டாசி 2025 புதன் 15:00 | பார்வைகள் : 161
பிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள் நிறுவனம் இருசக்கர வாகன உலகில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிர்கால மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் பிஎம்டபிள்யூ நிறுவனம் விஷன் சிஇ(BMW Vision CE) என்ற புதிய ஸ்கூட்டர் மாடல் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மியூனிக்கில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் வாகன கண்காட்சியில் இந்த புதிய விஷன் சிஇ(BMW Vision CE) ஸ்கூட்டர் மாடலானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விஷன் சிஇ கான்செப்ட் மாடல் ஸ்கூட்டர் பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது ஸ்கூட்டரின் உடற்பகுதியுடன் பலமான தண்டு வடிவ உலோக சட்டம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சட்டகத்தின் உள் பக்கத்தில் நுரை(foam) நிரப்பட்டு பூசப்பட்டுள்ளது. இது வாகனம் விபத்தில் சிக்கும் போதும், கீழே விழும் போதும் ஓட்டுநரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
அத்துடன் விபத்தின் போது ஓட்டுநர் தனது இருக்கையை விட்டு விலகாமல் இருக்க இதில் ஸ்போர்ட்ஸ் கார்களில் பயன்படுத்தப்படும் ஐந்து புள்ளி சீட் பெல்ட் அமைப்பு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
விஷன் சிஇ கான்செப்ட் மாடல் ஸ்கூட்டர் தாழ்வான இருக்கை அமைப்பை கொண்டு இருப்பதுடன், இதன் நீளமான சக்கர தளம்(wheelbase) கொண்டுள்ளது.
இதன் முக்கிய அம்சமாக, வாகனத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக விஷன் சிஇ ஸ்கூட்டரில் தானாகவே சமன் செய்யும் திறன்(self balancing capability) கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கால மின்சார வாகனங்களின் புதிய முன்னெடுப்பாக பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த புதிய விஷன் சிஇ கான்செப்ட் மாடல் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது.
ஆனால் இதன் உற்பத்தி குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் BMW வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1