தென் கொரியாவில் வருடத்திற்கு இரண்டு முறை 1 மணி நேரம் மட்டுமே திறக்கும் கடற்கரை

3 புரட்டாசி 2025 புதன் 15:00 | பார்வைகள் : 126
தென் கொரியாவில் வருடத்திற்கு இரண்டு முறை ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும் கடற்கரை உலக சுற்றுலா பயணிகளுக்கு வியப்பை ஏற்படுத்தும் சுற்றுலா தளமாக கருதப்படுகிறது.
தென் கொரியாவில் ஜிண்டோ கடலும், ஜிண்டோ தீவும் அதிசய நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டும் இடமாக பார்க்கப்படுகிறது.
பைபிளில் மோசே செங்கடலை இரண்டாக பிரித்ததை போல ஜிண்டோ கடலில் நிகழும் அதிசய நிகழ்வு சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கிறது.
ஜிண்டோ கடல்(Jindo Sea) பிரிதல் என்பது சிறிய மோடோ தீவுக்கும், ஜிண்டோ தீவுக்கும் இடையிலான 2.8 கிலோமீட்டர் நீள கடலானது இரண்டாக பிரிந்து கடலுக்குள் மூழ்கியிருக்கும் ஒரு நிலப் பாதை வெளிப்படுகிறது.
குறிப்பாக இந்த பாதை பாதசாரிகளால் அணுக கூடியதாக இருப்பது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய காரணியாக உள்ளது.
இந்த நிகழ்வானது சந்திர சுழற்சியின் விளைவாக ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அதிசயத்தில் அதிசயமாக இந்த நிகழ்வு வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே நடைபெறுகிறது.
இந்த அதிசய நிகழ்வானது வசந்த காலத்தில் அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலும், இலையுதிர் காலத்தில் அதாவது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வு அந்நாட்டு நாட்டுப்புற கதைகளில் ஆழமாக ஊறியுள்ளது.
கடல் நீர் இரண்டாக பிரியும் இந்த அற்புத நிகழ்வின் போது சுற்றுலா பயணிகள் இந்த கடற்பரப்பின் வழியாக நடந்து மாயாஜால அனுபவத்தை அனுபவிக்கின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1