Paristamil Navigation Paristamil advert login

ஹோட்டல் ஸ்டைல் கேசரி

ஹோட்டல் ஸ்டைல் கேசரி

3 புரட்டாசி 2025 புதன் 18:16 | பார்வைகள் : 115


பண்டிகை , விசேஷம் அல்லது மகிழ்ச்சியான தருணம் இப்படி எதுவாக இருந்தாலும் டக்குனு செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் என்றால் அது கேசரிதான். என்னதான் கேசரி எளிதாக சட்டென செய்யக்கூடியதாக இருந்தாலும் அதை சரியான பக்குவத்தில் செய்வதற்கு பலருக்கும் தெரியாது. அதுவும் ஹோட்டல் ஸ்டைலில் உதிரி உதிரியான வாயில் வைத்தாலே நழுவி செல்வது போல் செய்ய பலருக்கும் தெரியாது. அதற்கான இரகசியத்தை இன்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :
ரவை – 200 கிராம்
தண்ணீர் – 4 கப் (1 லிட்டர்)
சர்க்கரை – அரை கிலோ
முந்திரிப் பருப்பு – 25 gm
உலர் திராட்சை – 25 கிராம்
நெய் – 50 மில்லி
சமையல் எண்ணெய் – 50 மில்லி
ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க் – 50 மில்லி

செய்முறை : 
முதலில் பாத்திரம் வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய வையுங்கள். அதிலேயே கேசரி பொடி சேர்க்க வேண்டும்பின் அதில் ரவை சேர்த்து நன்கு வதக்கிகொள்ளுங்கள். ரவை பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

பொன்னிறமாக வந்ததும் தண்ணீர் சேர்த்து கலந்து வேக வைத்துக்கொள்ளுங்கள்.தண்ணீர் குறைந்து வெந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்துவிடுங்கள்.

கேசரி சற்று கெட்டிப்பதம் வந்ததும் பக்கத்தில் மற்றொரு பாத்திரம் வைத்து நெய் சேர்த்து முந்திரி திராட்சைகளை வறுத்து கேசரியில் சேர்க்கவும்.பின் கண்டன்ஸ் மில்க் சேர்த்து கலந்து விட உதிரி உதிரியாக கேசரி தயார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்