மிஷ்கின் ஜோடியாக நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

3 புரட்டாசி 2025 புதன் 18:16 | பார்வைகள் : 196
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர்-நடிகர் மிஷ்கின் ஆகியோர் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரவீன் விஜய் இயக்க உள்ளார்.
இயக்குனர் பிரவீன் விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Z ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரெம்பில்க்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இந்த அறிவிப்பு கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான கதைக்களங்களுக்காக அறியப்படும் மிஷ்கின் மற்றும் திறமையான நடிகையான கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் கூட்டணி, ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1