Paristamil Navigation Paristamil advert login

பாடசாலையில் ஆசிரியர்களுக்கிடையே முரன்பாடு.. கத்திக்குத்து!

பாடசாலையில் ஆசிரியர்களுக்கிடையே முரன்பாடு.. கத்திக்குத்து!

3 புரட்டாசி 2025 புதன் 21:35 | பார்வைகள் : 523


புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்தத்தில் இருந்து பிரெஞ்சுப் பாடசாலைகள் தினமும் தலைப்புச் செய்தியில் இடம்பிடிக்கின்றன.

பாடசாலை அதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்த நிலையில், Martigues (Bouches-du-Rhône) நகர பாடசாலை ஒன்றில் இரு ஆசிரியர்களுக்கு இடையே எழுந்த வாக்குவாதம், கத்திக்குத்தில் சென்று முடிந்துள்ளது. ஆசிரியர் ஓய்வு அறைக்குள் வைத்து ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு தடவைகள் கத்தியால் குத்தப்பட்டதாகவும், இருந்தபோதும் அவரது உயிருக்கு ஆபத்தில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தாகுதல் மேற்கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்