வேலை நிறுத்தத்தில் இணையும் புதிய மூன்று தொழிற்சங்கங்கள்!!

3 புரட்டாசி 2025 புதன் 22:35 | பார்வைகள் : 3139
CGT தொழிற்சங்கம் செப்டம்பர் 18, ஆம் திகதி வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவர்களோடு மேலும் மூன்று தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன.
கிட்டத்தட்ட 6 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்ட CGT உடன், CGT-Cheminot, Unsa Ferroviaire மற்றும் CFDT Cheminots ஆகிய மூன்று சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். CGT இம்மாதம் 10 மற்றும் 18 ஆம் திகதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால் 10 ஆம் திகதி வேலை நிறுத்தத்துக்கு மேற்படி புதிய தொழிற்சங்கங்கள் இணையவில்லை.. மாறாக 18 ஆம் திகதி இணைந்துள்ளதால், அன்றைய தினம் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.