Paristamil Navigation Paristamil advert login

ஜீரண சக்தியை உடலுக்கு அளித்திடும் தயிர் !!

 ஜீரண சக்தியை உடலுக்கு அளித்திடும் தயிர் !!

1 பங்குனி 2021 திங்கள் 12:32 | பார்வைகள் : 2079


 சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் ‘சி’யை அளிக்கிறது. 

 
தயிரில் இருக்கும் பூஞ்சை எதிர்ப்பு சக்தி தான் இதற்கு காரணம். நீங்கள் தலையில் தேய்க்கும் தயிரானது புளிப்பாக இருந்தால் முடி மிகவும் மிருதுவாக ஆகிவிடும்.  தயிரானது புளிக்காமல் இருக்க சிறிய துண்டு தேங்காயை அதில் போட்டு வைக்க வேண்டும். இதனால் இரண்டு மூன்று நாட்கள் கூட தயிர் புளிக்காமல் இருக்கும்.
 
அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
 
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம். சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
 
தயிர் உடலுக்கு தேவையான ஒரு அருமருந்து. சிலருக்கு தயிர், மோரை கண்டாலே பிடிக்காது. சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு உள்ளே இறங்காது. தயிர் நமது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்