போர்த்துக்கல் - லிஸ்பனில் ரயில் கேபிள் கார் விபத்து -15 பேர் பலி..!

4 புரட்டாசி 2025 வியாழன் 08:15 | பார்வைகள் : 343
போர்த்துக்கல்லின் தலைநகரான லிஸ்பனில் உள்ள 140 ஆண்டுகள் பழமையான குளோரியா ஃபுனிகுலர் எனும் ரயில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லிஸ்பனின் நகரமுதல்வர் கார்லோஸ் மொய்டாஸ் புதன்கிழமை இரவு வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.
04-09-2025 நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் நகர முதல்வரை வரவேற்கும் போர்த்துக்கல் அரசாங்கம், தேசிய துக்க தினமொன்றை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1