Paristamil Navigation Paristamil advert login

புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் யாழ். மாணவன் முதலிடம்

புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் யாழ். மாணவன் முதலிடம்

4 புரட்டாசி 2025 வியாழன் 10:23 | பார்வைகள் : 1128


2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை அளவில் காலி மாவட்டம் அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்தா கல்லூரியின் சந்துனி அமயா சிங்கள மொழி மூலம் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக  194  புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 51,969 ஆகும், இது 17.11% சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டைவிட 1.06% அதிகம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்