Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை

இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை

4 புரட்டாசி 2025 வியாழன் 17:08 | பார்வைகள் : 196


ஆக்கிரமிப்பு மேற்கு கரையை இணைக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபிரகாம் உடன்படிக்கையை சிறுமைப்படுத்தும் வகையில் இந்த முடிவு அமையும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய அரசு இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேற்கு கரையில் ஐந்தில் நான்கு பகுதிகளை இணைக்கும் அறிவிப்பை இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெஜலேல் ஸ்மோட்ரிச் வெளியிட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா - இஸ்ரேல் மோதலில் மத்திய கிழக்கில் செல்வாக்கு மிக்க ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலை எச்சரித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நேரடி எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்