Paristamil Navigation Paristamil advert login

15 வினாடிகளில் இருதய நோயை கண்டறியும் AI ஸ்டெதெஸ்கோப்

15 வினாடிகளில் இருதய நோயை கண்டறியும் AI ஸ்டெதெஸ்கோப்

5 புரட்டாசி 2025 வெள்ளி 07:51 | பார்வைகள் : 154


15 வினாடிகளில் இருதய நோகளைக் கண்டறியும் AI ஸ்டெதெஸ்கோப்பை பிரித்தானிய வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

200 ஆண்டுகளாக மருத்துவர்களின் முக்கிய கருவியாக இருக்கும் ஸ்டெதெஸ்கோப்பிற்கு, இப்போது செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதிய வடிவம் கிடைத்துள்ளது.

 

இங்கிலாந்தில் உள்ள Imperial College London மற்றும் Imperial College healthcare NHS Trust ஆகியவை இணைந்து, British Heart Foundation மற்றும் NIHR ஆகியவற்றுன் நிதியுதவியுடன் இந்த AI ஸ்டெதெஸ்கோப்பை உருவாக்கியுள்ளனர்.

 

இந்த கருவி, 15 வினாடிகளில் இருதய நோய்களை கண்டறியும் திறன் கொண்டது.

 

இருதய துடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் உள்ள மிகச் சிறிய வேறுபாடுகளை கண்டறிந்து, இருதய செயலிழப்பு, வால்வு குறைபாடு மற்றும் சாதாரண துடிப்புகளை கண்டறிய முடியும்.

 

இது, ECG (Electrocardiogram) பதிவையும் ஒரே நேரத்தில் எடுக்கிறது.

 

இந்த AI ஸ்டெதெஸ்கோப்பின் முக்கிய அம்சம், அதன் செஸ்ட் பீஸ் செவ்வக வடிவத்தில் இருப்பது.

 

இது நோயாளியின் மார்பில் வைக்கப்படும்போது இருதயத்தின் மின்னழுத்த சிக்னல்களை பதிவு செய்கிறது. அதே நேரத்தில், இரத்த ஓட்டத்தின் பதிவு செய்கிறது.

 

இந்த தரவுகள் cloud-ல் அனுப்பப்பட்டு, AI Algorithm மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. பின்னர் முடிவுகளை ஸ்மார்ட்போனில் பார்த்துக்கொள்ளலாம்.

 

இந்த கருவியின் மூலம் இருதய நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியும் என்பதால், அதற்கான சிகிச்சையை விரைவாக தொடங்கமுடியும்.

 

இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்