Paristamil Navigation Paristamil advert login

இலங்கையை உலுக்கிய கோர விபத்து - 15 பேர் மரணம் பலர் காயம்

 இலங்கையை உலுக்கிய கோர விபத்து - 15 பேர் மரணம் பலர் காயம்

5 புரட்டாசி 2025 வெள்ளி 07:51 | பார்வைகள் : 1477


எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் வியாழக்கிழமை  இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 05 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற பஸ் 200 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் எதிரே வந்த ஜீப்புடன் மோதியதுடன், வீதி பாதுகாப்பு வேலியையும் இடித்துச் சென்றுள்ளது.

விபத்தில் சிக்கிய பஸ் தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர்.

விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், பஸ் விபத்து நடந்த இடத்தில் இருந்த மோசமான நிலைமைகள் காரணமாக, அந்தக் குழுவை மீட்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்