பிரான்சில் பாதுகாப்பின்மைக்கு குடியேற்றவாதிகளே காரணம்! - மக்கள் கருத்து!!
.jpg)
5 புரட்டாசி 2025 வெள்ளி 17:45 | பார்வைகள் : 520
பிரான்சில் நிலவும் பாதிகாப்பின்மைக்கு குடியேற்றவாதிகள்/ அகதிகளே காரணம் என பிரெஞ்சு மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
மார்செயில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து, பிரெஞ்சு மக்களிடம் ‘பிரான்சில் நிலவும் பாதுகாப்பின்மைக்கு குடியேற்றவாதிகள் காரணம் என நீங்கள் நினைக்கின்றீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு பத்தில் ஏழுபேருக்கும் அதிகமானோர் (71% சதவீதமானோர்) ஆம் (OUI) என பதிலளித்துள்ளனர்.
ஏனைய 28% சதவீதமானவர்கள் “இல்லை” (NON) என பதிலளித்துள்ளனர்.
முன்னதாக, சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற ஒரு கருத்துக்கணிப்பிலும் 60 சதவீதமான மக்கள் ஆம் என கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது மார்செய் தாக்குதலின் பின்னர் இந்த எண்ணம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கருத்துக்கணிப்பில் 1,011 பேர் கலந்துகொண்டிருந்தனர். கருத்துக்கணிப்பை CNEWS, Europe 1 மற்றும் JDD போன்ற ஊடகங்களுக்காக SCA நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1