Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனில் வெளிநாட்டு வீரர்கள் கொல்லப்படுவார்கள்! புடின் எச்சரிக்கை!

உக்ரைனில் வெளிநாட்டு வீரர்கள் கொல்லப்படுவார்கள்! புடின் எச்சரிக்கை!

5 புரட்டாசி 2025 வெள்ளி 19:43 | பார்வைகள் : 231


உக்ரைனில் வெளிநாட்டு வீரர்கள் குவிக்கப்பட்டால் அவர்கள் ரஷ்ய படைகளால் குறி வைக்கப்படுவார்கள் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

 

உக்ரைன் - ரஷ்யா போர் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் நாட்டில் வேறு நாடுகளை சேர்ந்த போர் வீரர்கள் களமிறக்கப்பட்டால் அவர்கள் சட்டபூர்வமான இலக்காக கருதப்படுவார்கள் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார்.

 

கிழக்கு பொருளாதார மாநாட்டில் பேசிய புடின், இந்த கருத்தை தெரிவித்துள்ளார். உக்ரைனில் நடைபெற்று வரும் போர் நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு, உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட 26 நாடுகள் தங்கள் இராணுவ வீரர்களை உக்ரைனில் நிலைநிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டனர்.

 

உக்ரைன் நட்பு நாடுகளின் இந்த அறிவிப்புக்கு பிறகே புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் உக்ரைனில் அமைதி திரும்பிய பிறகு, அங்கு ராணுவ வீரர்களை நிலைநிறுத்துவதற்கான எந்தவொரு தேவையும் இல்லை என புடின் வாதிட்டுள்ளார்.

 

அத்துடன் ரஷ்யா மேற்கொள்ளப்படும் எந்தவொரு சமாதான உடன்படிக்கைகளையும் மதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

இதற்கு முந்தைய புடாபெஸ்ட் ஒப்பந்தம் உட்பட பல அமைதி ஒப்பந்தங்களை ரஷ்யா மீறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்