2.4 லட்சம் ஓட்டுநர்களுக்கு பரிஸ் மற்றும் நார்மண்டி இடையிலான நெடுஞ்சாலைகளில் அபராதம்!!
.jpeg)
5 புரட்டாசி 2025 வெள்ளி 20:42 | பார்வைகள் : 857
பரிஸ் மற்றும் நார்மண்டி இடையிலான A13 மற்றும் A14 நெடுஞ்சாலைகளில் கட்டணக் கபின்கள் அகற்றப்பட்டதால், பயணத்துக்குப் பின் பயணிகள் ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும். Sanef நிறுவனத்தின்படி, இந்த "flux libre" முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து, 240,000 ஓட்டுநர்கள் தங்கள் கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்று , செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பயணத்திற்கு மூன்று நாட்களில் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், இது குற்றமாகக் கருதப்படுகிறது. 15 நாட்களில் கட்டினால் €10 அபராதமும், அதன் பின் €90 ஆகும். இரண்டு மறு நினைவூட்டல்களுக்கு பிறகு, அபராதம் €375 வரை உயரக்கூடும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1