Paristamil Navigation Paristamil advert login

செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

6 புரட்டாசி 2025 சனி 03:43 | பார்வைகள் : 143


செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை. செங்கோட்டையன் மீது எந்த தவறும் கிடையாது'' என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.

செங்கோட்டையன் பேட்டி கொடுத்து இருக்கிறார். அவரது குரல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்கிறார் என்ற கேள்விக்கு தனியார் செய்தி சேனலுக்கு ஆட்டிட்டர் குருமூர்த்தி அளித்த பேட்டி: இதில் கலகம் என்ன இருக்குது. எனக்கு புரியவில்லை. எல்லோரும் ஒன்றாக வர வேண்டும் என்பதை எப்படி கலகக்குரல் என்று சொல்கிறீர்கள். அவர் இபிஎஸ்க்கு எதிராக எதும் கருத்து சொல்லி இருக்கிறாரா?

இபிஎஸ் தலைவராக இருக்க கூடாது என்று சொல்லி இருக்கிறாரா? அனைவரும் இபிஎஸ் தலைமையில் ஒன்றிணைய வேண்டுமென சொல்வது அவருக்கு பெருமை தான். செங்கோட்டையன் மீது எந்த தவறும் கிடையாது. அவரது குரல் கலகக்குரல் அல்ல. இபிஎஸ்-ஐ ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட ஒன்றாக இணைந்து அவரை ஏற்றுக்கொண்டால் கட்சிக்கு நல்லது.

உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை கட்சியில் சேர்த்து கொண்டு, நீங்கள் அவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது கலகக்குரல். அவர் சொல்லியதில் எனக்கு ஏதும் தோன்றவில்லை. அனைவரும் ஒன்றிணைந்தால் கட்சிக்கு நல்லது என்பது இபிஎஸ்க்கு தெரியும். எல்லாரும் ஒன்றிணைந்தால் தனக்கு நல்லதா? என்று யோசிக்கிறார். இதுதான் எனக்கும், இபிஎஸ்க்கும் உள்ள கருத்து வேறுபாடு. இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்