Paristamil Navigation Paristamil advert login

பிசிசிஐ தலைவராக உள்ள சச்சின் டெண்டுல்கர்..?

பிசிசிஐ தலைவராக உள்ள சச்சின் டெண்டுல்கர்..?

6 புரட்டாசி 2025 சனி 08:07 | பார்வைகள் : 123


பிசிசிஐ தலைவராக சச்சினை நியமிக்க அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ உள்ளது. கடந்த 2023 -24 நிதியாண்டில் மட்டும் ரூ.9,741.7 கோடி வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஐபிஎல் மூலம் மட்டும் ரூ.5,761 கோடிவருவாய் ஈட்டி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி பிசிசிஐயின் தலைவர் பதவியில் இருந்து வந்தார்.

பிசிசிஐ விதிப்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாக பொறுப்பில் இருக்கக்கூடாது என்பதால், ரோஜர் பின்னி தனது தலைவர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

தற்போது துணை தலைவராக உள்ள ராஜிவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

இந்நிலையில் வரும், செப்டம்பர் இறுதி வாரத்தில், பிசிசிஐ தலைவர், துணை தலைவர், செயலாளர். பொருளாளர், ஐபிஎல் சேர்மன் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் என்றாலும், பெரும்பாலும் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில், செயலாளர் தேவஜித் சைகியா, பொருளாளர் பிரப்தேஜ் பாட்டியா மற்றும் இணைச் செயலாளர் ரோஹன் கவுன்ஸ் ஆகியோர் அதே பதவியில் தொடரவே வாய்ப்புள்ளது.

தற்போதைய துணை தலைவரான ராஜிவ் சுக்லா, ஐபிஎல் சேர்மனாகவும், பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ராகேஷ் திவாரி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

 

 

இங்கிலாந்தில் நடைபெற்ற சச்சின் ஆண்டர்சன் தொடரின் போது, இது தொடர்பாக அரசியல் தலைவர் ஒருவர் சச்சினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கடந்த 2019 முதல் 2022 ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்தார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்