லண்டனில் முன்னாள் பிபிசி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

6 புரட்டாசி 2025 சனி 12:16 | பார்வைகள் : 1958
லண்டனின் உள்ள முன்னாள் BBC தொலைக்காட்சி மையத்தில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
லண்டனின் ஒயிட் சிட்டி பகுதியில் அமைந்துள்ள பழைய பிபிசி தொலைக்காட்சி மையத்தில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வர 15 தீயணைப்பு வாகனங்களுடன் 100 தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
உட் லேனில் உள்ள 9 மாடி கட்டிடத்தில் தீ பரவ தொடங்கிய நிலையில் அதிகாலை 3 மணியளவில் அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு மீட்பு பணிகள் நடைபெற்று வரும் இந்த கட்டிடம் 2013ம் ஆண்டு வரை பிபிசியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை, அதே சமயம் காலை 6.40 மணியிலிருந்து தீயானது கட்டிடத்தின் மேல் தளத்திலும் பரவ தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.