செம்மணி புதைகுழியில் 1500 சதுர அடிக்குள் 231 என்புக்கூடுகள் மீட்பு

6 புரட்டாசி 2025 சனி 15:10 | பார்வைகள் : 162
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, சுமார் 1500 சதுர அடி நிலப்பரப்பில் இருந்து 231 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது , அகழ்வாய்த்தளம் - 1 மற்றும் அகழ்வாய்வு தளம் - 02 என அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது அகழ்வாய்த்தளம் - 01 புதைகுழியில் கட்டம் கட்டமாக 54 நாட்களாக , அண்ணளவாக 30 அடி அகலமும் 50 அடி நீளமும் , 05 அடி ஆழத்திலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது குறித்த புதைகுழியில் இருந்து 231 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகவும் குவியல் ஆகவும், அமர்ந்த நிலையிலும் என சிறுவர் , சிசுக்கள் உள்ளிட்டவர்களின் என்புக்கூடுகளும் அடையாளம் கண்டு மீட்கப்பட்டிருந்தன.
அதேவேளை அகழ்வாய்வுத் தளம் - 02 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 09 என்புக்கூடுகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பிரான்சு, தொண்டைமண்டலம்
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1