பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

7 புரட்டாசி 2025 ஞாயிறு 07:19 | பார்வைகள் : 528
பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். இந்தியா- அமரிக்கா உறவுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை'' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க தயாரா என்ற கேள்விக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பதில்: நான் எப்போதும் தயாராக இருப்பேன். பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். அவர் ஒரு சிறந்த பிரதமர்.
ஆனால் தற்போது சில தருணங்களில் அவர் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் சிறப்பு வாய்ந்த உறவுகளை கொண்டுள்ளன. கவலைப்பட ஒன்றுமில்லை. இந்தியா, ரஷ்யாவில் இரு்து இவ்வளவு எண்ணெய் வாங்கும் என்பதில் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.
நான் அதை அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். நாங்கள் இந்தியாவின் மீது மிகப் பெரிய வரியை விதித்தோம். 50 சதவீதம் மிக அதிகமான வரி. உங்களுக்கு தெரியும். அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தார். பிரதமர் மோடியுடன் நான் மிகவும் நன்றாக பழகுகிறேன். இவ்வாறு டிரம்ப் பதில் அளித்தார்.
சிறப்பாக நடக்கிறது
இந்தியா மற்றும் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ''ஒப்பந்தம் சிறப்பாக நடந்து வருகிறது, என்றார்.