கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பொதியில் சிக்கிய பொருள்

6 புரட்டாசி 2025 சனி 17:31 | பார்வைகள் : 1041
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப்பையொன்றிலிருந்து 20 கோடி ருபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணப்பொதியிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் எடை 20.9 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்திலிருந்து வந்த பயணி ஒருவரால் இந்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் 53 வயதுடையவர் என்றும், பின்னர் அவர் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.