Paristamil Navigation Paristamil advert login

நரகத்தின் வாயில்கள் திறக்கப்படுவதாக கூறிய இஸ்ரேல் அமைச்சர்

நரகத்தின் வாயில்கள் திறக்கப்படுவதாக கூறிய இஸ்ரேல் அமைச்சர்

6 புரட்டாசி 2025 சனி 18:31 | பார்வைகள் : 294


காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது 05.09.2025 ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சனிக்கிழமை 06.09.2025 அதிகாலை வரை தொடர்ந்தது.

பாலஸ்தீனிய வீடுகள் மீது பாரிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

 

காசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் "நரகத்தின் வாயில்கள்" திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்