Paristamil Navigation Paristamil advert login

Essonne : காட்டுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!

Essonne : காட்டுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!

6 புரட்டாசி 2025 சனி 19:33 | பார்வைகள் : 441


 

Essonne மாவட்டத்தில் உள்ள Bièvres காட்டுப்பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5, வெள்ளிக்கிழமை மாலை இச்சடலம் மீட்கப்பட்டது. 30 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட ஒருவரின் சடலமே அது எனவும், விளையாட்டில் ஈடுபடும் போது அணியும் ஆடையே குறித்த நபர் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

காவல்துறையினர் அழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. உடற்கூறு பரிசோதனைகள் விரைவில் இடம்பெற உள்ளது.

குறித்த நபரது உடலில் சந்தேகத்துக்கிடமான தடயங்கள்  சில இருந்ததாகவும், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்