நான் பேரம்பேசவில்லை! - பிரதமர் பெய்ரூ!!

6 புரட்டாசி 2025 சனி 20:33 | பார்வைகள் : 1762
பிரதமர் பெய்ரூ மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில், ‘நான் எவரிடம் பேரம் பேசவில்லை!’ என அவர் தெரிவித்தார்.
“நாம் அனைவரும் அரசாங்கத்தை கீழே இழுத்து விழுத்த முற்படுகின்றோமே தவிர, அதில் ஒருமித்த ஒப்பந்தங்களோ, தீர்மானங்களோ எதுவும் இல்லை. மீண்டும் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்திடம் நீங்கள் எதிர்பார்ப்பது எதுவும் இல்லை. இதனால் நான் உங்களிடம் பேரபேச வரவில்லை!” என பிரதமர் பெய்ரூ தெரிவித்தார்.
நாளை மறுநாள் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மனம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் பிரதமருக்கு எதிராகவே வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. புதிய பிரதமருக்கான பெயர் தேடல்களும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.