Paristamil Navigation Paristamil advert login

இளைஞர்களை குறிவைக்கும் நிக்கோட்டின் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி!!

இளைஞர்களை குறிவைக்கும் நிக்கோட்டின் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி!!

6 புரட்டாசி 2025 சனி 20:10 | பார்வைகள் : 586


பிரான்சில் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நிக்கோட்டின் பொட்டலங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது. 

இந்த வகை புதிய நிக்கோட்டின் பொருட்கள் குறிப்பாக இளைஞர்களை குறிவைத்தவை என்பதால், இவற்றின் பயன்பாடு சிகரெட் பழக்கத்திற்கு வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இதற்குப் பிறகாக, கடந்த மாதங்களில் பப்கள் (puffs) மற்றும் பொது இடங்களில் புகைபிடித்தலை தடைசெய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிபுணர் Bertrand Dautzenberg கூறுவதாவது, இந்த புதிய பொருட்களை தடுக்க வேண்டியதுதான், ஆனால் உண்மையான ஆபத்து 

சிகரெட்டில்தான் உள்ளது. நிக்கோட்டின் விஷப்பொருளாக வகைப்படுத்தப்பட்டாலும், பிரான்சில் ஆண்டுக்கு 75,000 பேர் சிகரெட் காரணமாகவே இறக்கிறார்கள் என அவர் கூறுகிறார். எனவே, அரசின் நடவடிக்கை பயனுள்ளதாக இருந்தாலும், முக்கிய கவனம் சிகரெட்டை எதிர்த்து நிலைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்